dolphin in ganges river playing

மீரட் பகுதியின் வழியே செல்லும் கங்கை நதியில் நன்னீர் டால்பின்கள் துள்ளி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தெற்காசிய நன்னீர் டால்பின் என அழைக்கப்படும் இந்த வகை டால்பின்கள் இந்திய ஆறுகளில் காணப்படும் அரியவகை டால்பின்களாகும். கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில் வாழும் இந்த டால்பின்கள் இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. அதேபோல இதே இனத்தைச் சேர்ந்த வேறு வகையான சிந்து நதி டால்பின் பாகிஸ்தானில் சிந்து நதியில் காணப்படுகிறது.

Advertisment

பொதுவாகக் கங்கை நதி டால்பின்களை காண்பது அரிதான ஒரு நிகழ்வே. ஆனால் தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கங்கை நதியில் படகு போக்குவரத்து முடங்கியுள்ளது, இந்நிலையில் மீரட் பகுதியில் கங்கை நதியில் நன்னீர் டால்பின்கள் துள்ளி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பலரையும் கவர்ந்துள்ள இந்த வீடியோ அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. சுமார் 3,500 கங்கை நதி டால்பின்கள் மட்டுமே உலகில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டும் நிலையில், அழியும் நிலையில் உள்ள இந்த விலங்கினத்தின் விளையாட்டைப் பலரும் ரசித்து வருகின்றனர்.