Skip to main content

கொரோனா வைரஸ் பயத்தால் நாய்களுக்கும் மாஸ்க் அணிவிப்பு!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020


சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 



சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது சீனாவில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொரோனா மாஸ்க் அணிவித்துள்ளார்கள். விலங்குகளுக்கு இந்த வைரஸ் பரவுமா என்று தெரியாத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இந்த நடவடிக்கைகளை சீனர்கள் எடுத்துள்ளதாக தெரிகின்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்த நகராட்சி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
municipality caught stray dogs and handed them over to the shelter

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தெரு நாய்களால் அடிக்கடி விபத்துகள், நாய்கள் கடித்தல், ஆடு, மாடு கால்நடைகளை கடித்து குதறிவிடுகிறது. அதனால் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பலரும் மனுக்கள் கொடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து நகராட்சி ஊழியர்கள் 42 நாய்களை பிடித்திருந்தனர். இந்த நாய்களை வெளியிடங்களிலோ, காட்டுப் பகுதியிலோ இறக்கிவிடப்படும் போது மீண்டும் வந்துவிடும் என்பதால்  விராலிமலை ரோடு இலுப்பூர் தாலுகாவில் உள்ள பைரவர் நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க கேட்டுள்ளனர்.

இதே போல கிராமங்களிலும் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்களையும் பிடித்து காப்பகங்களில் வளர்க்கப்படுமானால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும் நாய்கள் கொல்லப்படாமலும் பாதுகாக்கப்படலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாய் சடலம்; மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Dog carcass in drinking water tank; Again a sensational incident

ஒரு வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு ஆண்டை கடந்து தற்பொழுது வரை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதேபோன்று பொது இடங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அண்மையில் காஞ்சிபுரத்தில் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக பரபரப்பு புகார்கள் எழ, அந்த தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் இறந்த நாயின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள துட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆட்டையான் வளைவு பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து அரசுப் பள்ளி மற்றும் ஐந்து கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல குடிநீர் ஆபரேட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தண்ணீர் நிரம்பியுள்ளதா என்று சோதனை செய்தபோது அங்கு நாய் ஒன்று இறந்த நிலையில் நீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தாரமங்கலம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.