Advertisment

ஒடிஷா மாநிலத்தில் நல்ல பாம்பிடம் இருந்து தனது குட்டிகளை காப்பாற்ற தாய் நாய் போராடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகா பரவி வருகிறது.

ஒடிஷாவிலுள்ள பத்ராக் பகுதியில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை பார்த்த அப்பகுதி மக்கள், அலறி அடித்து ஓடினர். பின், பாம்பை கட்டையை எடுத்து அடிக்கத் தொடங்கினர். இதனால் பாம்பு மறைவான இடத்தில் பதுங்கியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பாம்பு சென்ற மறைவிடத்தில் நாய் ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. திடீரென அங்கு வந்த தாய் நாய், நல்ல பாம்பை பார்த்து பயப்படாமல் குறைத்தது. நல்ல பாம்புக்கு அருகிலிருந்த குட்டிகளை பாம்பு கொத்த ஆரம்பித்தது. கோபமடைந்த தாய் நாய் பாம்பை விரட்ட மிகவும் போரடியது. அதை சுற்றி வேடிக்கை பார்த்துகொண்டிருந்த மனிதர்கள், தங்களின் மொபைல் போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தனர். இறுதியில், வனத்துறையினர் வந்து நல்ல பாம்பை பிடித்துக் கொண்டு சென்றனர்.

Advertisment

எனினும் பாம்பு கொத்தியதில் ஐந்து குட்டிகளில் நான்கு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தது. ஒரே ஒரு குட்டி மட்டும் உயிர்பிழைத்தது. நான்கு குட்டிகளும் உயிரிழந்தது என்பதை மோர்ந்து கண்டுபிடித்த தாய் நாய், பிறகு கண்ணீர் சிந்தியது. இச்சம்பவத்தை பார்த்துகொண்டிருந்த மனிதர்களும் கண்ணீர் சிந்த தொடங்கினர்.