Skip to main content

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட வைத்தியர் மர்ம மரணம்..!

Published on 03/08/2018 | Edited on 27/08/2018
mani

 

      திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வைத்தியர் காவல் நிலையத்திலேயே மர்ம மரணம் அடைய, உறவினர்கள் செய்த சாலை மறியலால் பதற்றம் தொற்றியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில்.!

 

mariy

   

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் தெருவினை சேர்ந்தவர் மணிகண்டன். பரம்பரையாக வயிற்றில் "தொக்கம்" எடுக்கும் வைத்தியத் தொழிலை செய்து வந்த இவரை, இதே பகுதியிலுள்ள மகாதேவன் என்பவர் வீட்டில் 16 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் திருடியதாக சந்தேகிக்கபட்டு முதுகுளத்தூர் க்ரைம் போலீசார்  நேற்றிரவு முதுகுளத்தூர் போலீசார் அழைத்து சென்றிருக்கின்றனர். சாதாரண காவல் விசாரணைக்கு அழைத்து சென்றவர் இன்று காலையில் இறந்துள்ளார். இறந்த மணிகண்டனை முதுகுளத்தூர்  காவல்நிலையத்திலிருந்து பரமக்குடிக்கு  அரசு மருத்துவனைக்கு  கொண்டு சென்றிருக்கின்றனர். இறப்பின் காரணத்தை போலீசார் கூற மறுத்த நிலையில், " போலீசார் அடித்ததாலே மணிகண்டன் இறந்துள்ளார். சட்டப்படி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென" முதுகுளத்தூர் டி.எஸ்.பி.அலுவலகம் எதிரிலுள்ள சாலையில் உட்கார்ந்து மறியல் செய்ய ஆரம்பித்தனர் இறந்தவரின் உறவினர்கள். சிறிது நேரம் மறியல் நீடித்த நிலையில் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த கலைந்து சென்றுள்ளனர். இதனால் இங்கு பதற்றம் நிலவி வருகின்றது.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எதிர்பார்ப்பை உருவாக்கிய மத்தகம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Atharva , Manikandan Mathagam release date announced

 

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப் சீரிஸை, இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் ராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். 

 

இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில், அண்மையில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது வரை யூட்யூபில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

 

இந்த சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற 18 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சீரிஸ் வெளியாகிறது. 

 

 


 

Next Story

முன்னாள் அமைச்சர் vs ஒன்றிய செயலாளர்; அதிமுகவினரிடையே மோதல் 

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Clash between aiadmk Manikandan and MaruthuPandian supporters

 

அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் மற்றும் ஒன்றியச் செயலாளர் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதிமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும், ஒன்றியச் செயலாளர் மருது பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷம் போடுவது, விசில் அடிப்பதில் மோதல் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிதடியாக மாறியது. இருதரப்புக்கும் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தகராற்றில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேசிய மாவட்டச் செயலாளர் முனியசாமி, “உட்கட்சி பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு பொது இடத்தில் தகராற்றில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. நடந்த சம்பவம் குறித்து கட்சித் தலைமையிடம் புகார் அளிக்கப்படும்” என்றார்.