Advertisment

ஐ.சி.யு. நோயாளிக்கு மந்திரம் செய்த மருத்துவர்       

புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யுவில் இருந்த நோயாளியை டாக்டரால் குணப்படுத்தமுடியவில்லை என்று மந்திரவாதியைஅழைத்து மந்திரம் மூலம் குணப்படுத்த நினைத்த மருத்துவரால்இறந்த நோயாளி.

Advertisment

ICU

புனேவில் 24 வயதான சந்தியா சோனாவானே, மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புனேவில் உள்ள தனியார் க்ளினிக்கில்சிகிச்சைக்காகசில மாதங்களுக்குமுன்புஅனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சதிஷ் சவாண் அவரை குணப்படுத்துவது கடினம் என்றும், மருத்துவமனையில் வைத்துதான் பார்க்க வேண்டும் என்றும்கூறியதால்அவர்தீனாநாத் மங்கேஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலையை குணப்படுத்த முயன்றமருத்துவர் சவாண் மருத்துவத்தை நம்பி இனி உபயோகம் இல்லை என்று முடிவு செய்து, மாந்திரீகம்மூலம் குணப்படுத்துவது என்று முடிவு செய்தார்.அதன்பின்சந்தியா இருந்தஐ.சி.யுவிற்குஒரு மந்திரவாதியை அழைத்துவந்து மந்திரம் மூலம் குணப்படுத்தும்பொழுதுசந்தியாவின்உயிர் பிரிந்ததது.

Advertisment

அதன்பின் மருத்துவர் சவானுக்கு சந்தியாவின் குடும்பத்தார் போன் செய்துள்ளனர். மருத்துவர் அவர்களின் அழைப்பை ஏற்காமல் தவிர்த்திருக்கிறார். அவர் தவிர்ப்பதை உணர்ந்த சந்தியாவின் குடும்பத்தார் ஆலங்கார் காவல் நிலையத்தில் மந்திரவாதி மீதும், மருத்துவர் மீதும் புகார் அளித்தனர். காவல்துறையினர்ஐ.சி.யுவிலிருந்த சி.சி.டிவி கேமராவை ஆராய்ந்து அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்துமருத்துவமனை நிர்வாகம் "நாங்கள்ஐ.சி.யுவிற்குள் செல்ல மிகுந்தகட்டுப்பாடுகள்வைத்துள்ளோம், மருத்துவர்களைத்தவிர வேறு யாரையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும்,சந்தியா உடல் உறுப்புகள் செயலிழந்துதான்இறந்தார்" என்றும்கூறியுள்ளது.

Doctor ICU
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe