Advertisment

'டாக்கிங்' வெற்றி; இஸ்ரோ பெருமிதம்

'Docking' success; Proud of ISRO

Advertisment

விண்வெளியில் இரண்டு சேர்க்கை கோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

220 கிலோ எடை கொண்ட இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. குறிப்பாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இந்த டாக்கிங் முறை முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்பட்டது. தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல் முறையை வெற்றிகரமாக இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.

ககன்யான் திட்டம் மட்டுமல்லாது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்சந்திரயான்-4 ஆகிய திட்டத்திற்கும்இந்த டாக்கிங் பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. டாக்கிங் முறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்க, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து நான்காவது நாடாக வரலாற்றில் சாதனை படைத்ததுள்ளது இந்தியாவின் இஸ்ரோ.

Advertisment

Announcement Space
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe