Advertisment

''குழந்தைங்ககிட்ட இப்படித்தான் நடந்துப்பியா...'' - பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை வெளுத்தெடுத்த மக்கள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை மாணவிகளின் பெற்றோர் கொடூரமாக தாக்கிய சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹிஜாமாபாத்தில், அரசு பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு, பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணா பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் வந்து முறையிட்டனர். திடீரென ஆசிரியர் ரமணாவை மாணவிகளின் பெற்றோர்கள் சரமாரியாக தாக்கினார். சிலர் காலணிகள் மூலம் ஆசிரியரைத்தாக்கிய நிலையில் அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர் ரமணாவை கைது செய்து புகார்தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Advertisment

incident teacher telangana
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe