Advertisment

அடுத்த 2 நாட்கள் ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்!!

கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தினந்தோறும் 4 மணிக்கு செய்தியாளர்களைசந்தித்து வருகிறது.

Advertisment

corona

இந்நிலையில் இன்று ரேபிட்டெஸ்ட் கிட்களைஅனைத்து மாநிலங்களுக்கும் போதுமானதாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் மத்தியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது.அப்போது ரேபிட்டெஸ்ட் கிட்கள் மாறுபட்ட முடிவுகள் காட்டுவதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டபோது. ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்களில் ரேபிட்டெஸ்ட் கிட் மூலம் கரோனாபரிசோதனை செய்தபோது ஒரு முறை வேறு முடிவும், அடுத்தமுறை வேறுவிதமான முடிவு வந்ததாககுற்றச்சாட்டு எழுந்தது. 6சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

nakkheeran app

Advertisment

இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கரோனாவை கண்டறிய ரேபிட்டெஸ்ட் கிட்களைபயன்படுத்த வேண்டாமென இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மீண்டும் பயன்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் திரும்பவும் தெரிவிக்கப்படும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ரேபிட்டெஸ்ட் கிட்களின் தரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி கவுன்சில் பரிசோதித்து வருவதாகவும்,அதனால் இன்னும்இரண்டு நாட்கள் ரேபிட்டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகள் தரப்பிலிருந்தும் சீனாவில் இருந்து வாங்கப்பட்ட இந்த ரேபிட்டெஸ்ட் கிட்கள் குறித்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

china India corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe