"ஆதார் நகலை யாரிடமும் கொடுக்காதீர்கள்"- மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! 

ஆதார் அட்டை தொடர்பாக, மக்களுக்கு புதிய அறிவுறுத்தல் அடங்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

இது தொடர்பாக, மத்திய அரசின் மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் ஆதார் அட்டையின் நகலை யாரிடமும் வழங்க வேண்டாம்; அது தவறாகப் பயன்படுத்தக் கூடும். கடைசி நான்கு எண்களை மட்டுமே காட்டும் 'Masked' ஆதாரைப் பயன்படுத்தலாம். பிரவுசிங் சென்டர்கள், பொது கணினியில் இ- ஆதாரை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆதார் நகலைப் பெறும் நிறுவனங்கள் அதை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.

aadhar union government
இதையும் படியுங்கள்
Subscribe