Advertisment

கேரள வெள்ள சேதத்திற்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதிஉதவி...

flood

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளசேதத்திற்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். அதில் பலர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.

Advertisment

மழை தொடர்ந்துவருவதால், கேரள மாநிலத்தில் உள்ள 22 அணைகளும்திறந்துவைக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், மேலும் பல பகுதிகளை சூழந்துகொண்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த இடுக்கி, ஆலப்புலா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களை விமான ஹெலிகாப்டரில் சென்று நேற்று நேரில் ஆய்வு செய்தார்கேரள் முதல்வர் பினராயி விஜயன். அவருடன், கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மாநில வருவாய்துறை அமைச்சர் சந்திரசேகரன், மாநில காவல்துறை தலைவர் லோக்நாத பெஹ்ரா ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாயை திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் ’முதலமைச்சர் நிவாரண நிதிக்கு’ வழங்கினார்.

flood Kerala kerala flood stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe