தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்தார். இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக மக்களவை கேள்வி நேரத்தில் மக்களவையின் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
இவரின் கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் கிரண்பேடியிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டதாகவும், தண்ணீர் பிரச்சனை விவகாரத்தில் தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவித்ததாக மக்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.