Skip to main content

“மோடியின் கருத்துக்கு செவி சாய்த்து முதன்மை மந்திரி இதில் தீவிரமாக செயல்பட வேண்டும்” - திமுக எம்.எல்.ஏ சிவா வேண்டுகோள்!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

DMK MLA Siva urges minister to listen to Modi voice and take action seriously

 

பிரதமரின் அறிவுறுத்தல்படி செயல்பட ஏதுவாக காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தை முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என புதுச்சேரி (தெற்கு) மாநில அமைப்பாளரும், திமுக எம்.எல்.ஏவுமான சிவா, பாஜக அமைச்சர் நமச்சிவாயத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். காதி மற்றும் கிராம தொழில்களின் வளர்ச்சிக்கான திட்டங்களைத் திட்டமிடுவது, அத்தொழில்களைத் தொடங்க ஊக்குவிப்பது, காதி மற்றும் கிராம தொழில்களை அமைப்பதன் மூலம் தகுதியானவர்களுக்கு வேலை வழங்குவது, அத்தொழில்களின் வளர்ச்சிக்கு கடன்களை வழங்குவது, அத்தகைய தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் கருவிகளை வழங்குவது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் கண்காட்சிகளாக வைப்பது, விற்பனை செய்து தருவது, அதற்காக அரசிடம் மானியம் பெற்று அப்பொருட்களுக்குத் தள்ளுபடி வழங்குவது ஆகிய பணிகளை செய்வதற்காக பாண்டிச்சேரி காதி மற்றும் கிராம தொழில் வாரியம் உருவாக்கப்பட்டது. 

 

ஆனால், இந்த வாரியத்தின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முடங்கியுள்ளது. சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. தற்போது 7 மாத சம்பளம் நிலுவையில் உள்ளது. பொதுமக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட தள்ளுபடி தொகை ரூ. 4.5 கோடி, பல ஆண்டுகளாக வாரியத்திற்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்தத் தொகைதான் தொழில் தொடங்குவதற்கு கடனுதவி உள்ளிட்டவற்றை வாரியம் வழங்க உதவியாக இருக்கும். அரசு வழங்காததால் இதையும் வாரியம் செய்ய முடியவில்லை. புதுச்சேரி கதர் வாரிய தொழிலாளர்களுக்கு இ.பி.எஃப், இ.எஸ்.ஐ, இன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தவில்லை. கடந்த ஓராண்டு மட்டுமே 9 பேர் இறந்துள்ளனர். இன்சூரன்ஸ் பிரிமியம் தடையின்றி செலுத்தப்பட்டிருந்தால் அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ. 7 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைத்திருக்கும். அதுவும் கிடைக்காமல் அக்குடும்பம் நிர்க்கதியாக உள்ளது. எதிர்காலத்தில் இந்நிலை தொடராமல் இருக்க உடனடியாக அரசு இன்சூரன்ஸ் பிரிமியம், இ.எஸ்.ஐ, பி.எஃப் உள்ளிட்ட நிலுவை தொகைகளையும் வழங்க வேண்டும்.

 

இந்த வாரியம் சிறப்பாக செயல்பட தொடங்கினால் இளைஞர்கள் கதர் தொழிலில் வேலைவாய்ப்பு பெறுவர். அவர்களது கதர் பொருட்கள், சுற்றுலா பயணிகள் வருகைக்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். எனவே புதுச்சேரி காதி மற்றும் கிராம தெழில் வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவந்து, அரசு தர வேண்டிய நிதிகளை முழுமையாக கொடுத்து, சிறப்பாக செயல்படச் செய்ய வேண்டும்.  பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களிடம் பேசும்போது காதி பொருட்களை வாங்குவது தேசத்துக்கு ஆற்றும் சேவை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், புதுச்சேரியில் கதர் பொருட்களை உற்பத்தி செய்வதே, வாரிய செயல்பாட்டின் முடக்கத்தால் முடங்கிப்போய் உள்ளது. எனவே பிரதமரின் கருத்துக்கு செவி சாய்த்து, புதுச்சேரியில் ஆளும் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசில் பாஜகவின் முதன்மை மந்திரியாக இருப்பவர் இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு, சம்பளமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி, ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் நோக்கில் புதுச்சேரி காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தை முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் பிரதமரின் கூற்றுப்படி மக்களுக்கு கதர் பொருட்களைக் கிடைக்கச் செய்ய முடியும் என்பதால், இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.