ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் தங்கள் வருமான விவரங்களை தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisment

stalin

அந்த வகையில் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் திமுக ரூ.35.748 கோடி வருமானத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் திமுகவின் வருமானம் வெறும் 3.78 கோடியாக இருந்துள்ளது. இது கடந்த ஆண்டு சொத்து மதிப்பை விட 845.71 மடங்கு அதிகமாகும்.

Advertisment

மாநில கட்சிகளின் வருமான பட்டியல்களில் ரூ.47.19 கோடி வருவாயுடன் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் உள்ளது. அதற்க்கு அடுத்த இடத்தில திமுகதான் உள்ளது.

அதேசமயம் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.12.72 கோடி வருமானமாக பெற்றுள்ளது. 2016-17-ல் அதிமுக 48.78 கோடி ரூபாய் வருமானம் பெற்றது. இது அதிமுகவின் கடந்த ஆண்டு வருமானத்தை விட 74 சதவீதம் குறைவு ஆகும்.

Advertisment

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் முதல் மூன்று இடங்களில் முறையே சமாஜ்வாதி, திமுக, டிஆர்எஸ் ஆகிய காட்சிகள் பெற்றுள்ளன. 35 கோடியை வருமானமாக பெற்ற திமுக, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதில் ரூ.27.47 கோடி அளவு செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.