Advertisment

"தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்"- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டி! 

dmk and congress party alliance puducherry congress leader incident

Advertisment

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் மற்றும் இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவப்படம், சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

dmk and congress party alliance puducherry congress leader incident

இந்த நிகழ்ச்சிகளில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி 'சிற்றுண்டி திட்டம்' விரைவில் செயல்படுத்தப்படும்" என்றார்.

Advertisment

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "தற்போது உள்ள தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிவரும் சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் தொடரும்" என கூறினார்.

leaders congress party Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe