Advertisment

"தொகுதிப் பங்கீடு குறித்து ஓரிரு நாளில் இறுதி முடிவு" - நாராயணசாமி பேட்டி! 

DMK AND CONGRESS ALLIANCE NARAYANASAMY PRESSMEET

Advertisment

புதுச்சேரியில் காங்கிரஸ்- தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று (08/03/2021) நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் எம்.பி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.எஸ்.சுப்ரமணியன், தி.மு.க சார்பில் மாநில அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ மற்றும் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரி தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை 45 நிமிடம் நடைபெற்றது. அதில், கூட்டணிக் கட்சிகள் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. தி.மு.க. கேட்ட தொகுதிகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தகருத்துகள் பரிமாறப்பட்டது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று (08/03/2021) மாலை சென்னை வருகிறார். தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் தெரிய வரும்" என்று தெரிவித்துள்ளார்.

congress Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe