ADVERTISEMENT

92% சரிவை சந்தித்த டீ.எல்.எஃப் (DLF)

05:04 PM Feb 08, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டீ.எல்.எஃப், நடப்பு நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. டீ.எல்.எஃப் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் தனது நிகர லாபம் ரூ. 335 கோடி என பதிவு செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டு வருவாயுடன் ஒப்பிடும்போது 92% சரிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம், கடந்த நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 4,091 கோடி என பதிவு செய்திருந்தது. மேலும் தற்போது அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,406 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT