Advertisment

"துரோகிகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்" - சிவகுமார் கருத்து...

கர்நாடகாவில் எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

Advertisment

dk shivakumar about karnataka byelection results

இந்த 15 இடங்களில் 6 இடங்களை கைப்பற்றினால் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற சூழலில், அதற்கும் மேலான இடங்களை பாஜக கைப்பற்றியது. இதன் காரணமாக கர்நாடகாவில் பாஜக தனது அரசை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்தார். இந்த நிலையில், அடுத்த ஒருமணி நேரத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் குண்டு ராவ் அறிவித்தார். இந்நிலையில் இந்த தேர்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிவகுமார், "துரோகிகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe