Advertisment

புதுச்சேரியிலும் திங்கள்கிழமை தீபாவளி விடுமுறை! அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் தீபாவளி பண்டிகைக்கு மறு நாளான அக்டோபர் 28-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு போனசும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு வருவதற்காக தீபாவளி பண்டிகைக்கு மறு நாளான அக்டோபர் 28- ஆம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9 -ஆம் தேதி பணி நாளாக இருக்கும்”என தெரிவித்தார்.

Advertisment

diwali holiday and diwali bonus announced puducherry cm narayansamy

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் சி மற்றும் பி குரூப் பிரிவு ஊழியர்களுக்கு ரூபாய் 6,908 ம், தினக்கூலி ஊழியர்களுக்கு 1,184 ம் தீபாவளி போனஸ் வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

bonus holiday ANNOUNCED government Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe