Advertisment

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு!

diwali gift for family cardholders in Puducherry

தீபாவளியையொட்டி புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி உள்ளார். இந்நிலையில் வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவச பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

ஆனால் தற்போது,தீபாவளி பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதிலாக ரூ.490 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி 3 லட்சத்து 37 ஆயிரத்து 406 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.16.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

diwali Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe