/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/car_3.jpg)
ஒவ்வொரு தீபாவளிக்கும் ஊழியர்களுக்கு போனஸ்களை அள்ளிக்கொடுக்கும் குஜராத் வைர வியாபாரி, இந்த ஆண்டு 600 ஊழியர்களுக்கு தலா ஒரு காரை பரிசு அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் ஹரி கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சாவ்ஜி தொலாவியா ஆண்டு தோறும் ஊழியர்களுக்கு வீடு, கார், நகைகளை வழங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு 1200 ஊழியர்களுக்கு கார் மற்றும் தங்கம், வைரம், வெள்ளி நகைகளை வழங்கிய அவர் இந்த ஆண்டு பட்டை தீட்டும் ஊழியர்கள், பொறியாளர்கள் 600 பேருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கார்களை வழங்கியுள்ளார். ரெனால்ட் KWID மற்றும் மாருதி சுசூகி செலாரியோ கார்களை வழங்கியுள்ளார்.
இதற்காக சூரத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை வாடகைக்கு எடுத்த அவர், அங்கு 600 கார்களையும் நிறுத்தினார். வியாழக்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சியை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிறுவனத்தில் 5500 ஊழியர்கள் உள்ளனர். இதில் 4 ஆயிரம் பேர் ஏற்கனவே தீபாவளி பண்டிகையின்போது விலையுயர்ந்த பரிசுகளை பெற்றுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)