Advertisment

நடைபயிற்சி சென்ற நீதிபதி திட்டமிட்டு கொலை... வெளியான சிசிடிவி காட்சிகள்!

District judge incident while walking ...  CCTV footage released!

Advertisment

நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மாவட்ட நீதிபதி விபத்திற்குள்ளாகி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் வாயிலாக உறுதியாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் நடைபயிற்சிக்காகச் சென்ற மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்தின் உடல் சாலையோரம் கண்டறியப்பட்டது. அதிவேகமாக வந்த வாகனங்கள் இடித்து, அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று காவல்துறையினர் முதலில் கருதினர். அப்பகுதியில் இருந்தசிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்துக்கு மிக நெருக்கமாகச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம், அவரை இடித்துவிட்டு அதிவேகமாக அங்கிருந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

— Ankur (@iAnkurSingh) July 28, 2021

Advertisment

அதைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதி உயிரிழந்ததைக் கொலை வழக்காக மாற்றி பதிவுசெய்த காவல்துறையினர், கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதனிடையே, மாவட்ட நீதிபதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டறிந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று (29/07/2021) விசாரணை நடைபெறுகிறது.

Police investigation incident district judges jharkand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe