/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dance44.jpg)
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரும் உற்சாகமாக நடனமாடியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம், பத்தினம்திட்டாவில் உள்ள எம்ஜி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அந்த மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ் ஐயர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தனர். அவர்களின் நடனத்தைக் கண்டு ரசித்த மாவட்ட ஆட்சியர், ஒரு கட்டத்தில் மேடை ஏறி, அவர்களுடன் இணைந்து நடனமாடினார். மாவட்ட ஆட்சியர்களுடன் மாணவ, மாணவிகள் நடனமாட, கீழே இருந்த மாணவர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
Follow Us