nn

அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்து இமாச்சலப்பிரதேச அரசு அதிரடி காட்டியுள்ளது.

Advertisment

அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதையடுத்து தேர்வாணையத்தை கலைக்கும் முடிவை இமாச்சல்அரசு அதிரடியாக எடுத்துள்ளது.வினாத்தாள் வெளியானது குறித்து துறை ரீதியாகவும்காவல்துறை மூலமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

Advertisment

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் இடைத்தரகர்களுக்கு தொடர்ந்து தரப்பட்டது நடத்தப்பட்ட விசாரணையில்தெரியவந்தது. இந்நிலையில், புகாருக்குள்ளானதேர்வாணைய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் சுக்விந்தர், தேர்வாணைய ஊழியர்கள் அனைவரும் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என அறிவித்துள்ளதோடு இமாச்சலப்பிரதேசமாநிலத்தின் தேர்வாணையத்தை கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.