Disregarded flood warning; Shocking 'Anda Trip'

கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆந்திராவில் ஒரு பகுதியில் மக்கள் அதிர்ச்சியூட்டும் விதமாக அண்டாவில் அமர்ந்து ஆற்றைக் கடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தொடர் மழை காரணமாக ஆந்திராவில் பல இடங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி துணி துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் ஆந்திராவின் அலுவி சீதாராமா ராஜு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஓடையைக் கடப்பதற்காக மக்கள் அண்டா போன்ற பெரிய பாத்திரத்தில் உட்கார வைத்து தள்ளிச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை பெரிய பாத்திரத்தில் அமர வைத்து ஆற்றைக் கடந்து செல்லும் இந்தக் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.