Advertisment

மசூதிக்கான நிலம் யாருக்குச் சொந்தம்? - அயோத்தியில் மீண்டும் நில சர்ச்சை!

ayodhya masjid

பாபர்மசூதி இருந்தநிலம் யாருக்குச்சொந்தம்என்பதுதொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் அந்த நிலத்தில்ராமர்கோவில்கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது.இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும் ஆணையிட்டது. இதனையடுத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Advertisment

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மசூதிக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது மசூதி கட்டுவதற்கான பணிகள்நடந்துவருகின்றன. கட்டப்படவிருக்கும் மசூதியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு உரிமைகோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Advertisment

டெல்லியைச் சேர்ந்த சகோதரிகளான ராணி பலூஜா மற்றும் ராம ராணி பஞ்சாபிஆகியோர், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி,அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல்செய்துள்ளமனுவில்,எங்களது தந்தை 1947 இந்தியா - பாகிஸ்தான்பிரிவினையின் போது அயோத்தியில் வந்து தங்கினார். அப்போது அவருக்கு28 ஏக்கர் நிலம் ஐந்து வருடங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பிறகும், அந்த நிலம் தங்களதுதந்தையிடமேஇருந்தது. பின்னர் நில வருவாய்ப் பதிவுகளில், தங்களதுதந்தையின்பெயர் சேர்க்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்தமனுவில், மீண்டும்எங்களது தந்தையின்பெயர்நில வருவாய்ப்பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டது. மேல்முறையீடு செய்தபிறகு அவரதுபெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. தற்போது மீண்டும் அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளது. அதற்குஎதிராகச் செய்யப்பட்ட மேல்முறையீடு அதிகாரிகளின் முன்னிலையில் உள்ளது. ஆனால், அதிகாரிகள் அதைப் பரிசீலிக்காமல் எங்களின் 28 ஏக்கர் நிலத்தில்இருந்து ஐந்து ஏக்கரைமசூதி கட்ட ஒதுக்கியுள்ளனர்.எங்களின்,மேல்முறையீட்டின் மீது முடிவெடுக்காமல் மசூதிக்குநிலம் வழங்குவதற்குத் தடை விதிக்கவேண்டும்எனக் கோரியுள்ளனர். இந்த மனு வரும் 8 ஆம் தேதி விசாரணைக்குவரவுள்ளது.

ram temple babarmajid Ayodhya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe