bmn

Advertisment

ஆந்திராவில் கறி விருந்தில் தனக்குகுறைவாக இறைச்சி போட்டதால் ஆத்திரமடைந்த நபர் தனக்கு உணவளித்தவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேர்கான் மற்றும் சிவா. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண கறி விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற சிவாவுக்கு உணவு பரிமாறிய ஷேர்கான் குறைவாக இறைச்சி துண்டுகளை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவா, ஷேர்க்கானை அன்று இரவு கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஷேர்கான் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஷேர்கான் சிவாவை சமாதானம் பேசலாம் என்று அழைத்துச் சென்று நடுக்காட்டில் கொலை செய்து புதைத்துவிட்டு வந்துள்ளார். சிவாவின் அம்மா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. ஒரு துண்டு கறிக்காக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.