Advertisment

அரசு பணியிலிருந்து டிஸ்மிஸ், 77 நாட்கள் சிறை... இளம் பெண் வாக்கு மூலத்தால் ஜாமீன்...!

Dismissed from government service, jailed for 77 days ... Bail by young woman source ...!

கேரளாவில் கரோனா பாதித்த 3 பெண்களை பாலியியல் தொந்தரவு செய்த இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் ஒருஆண் நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கபட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த நேரத்தில் கொல்லம் மாவட்டம் குளத்துபுழா ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் பிரதீப்குமாரிடம் கரோனா நெகடிவ் சான்றிதழ் வாங்கச் சென்ற இளம் பெண்ணிடம் பாங்கோடு அருகே பரதன்னூாில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்தால் சான்றிதழ் தருவதாக கூறியதால் அங்குச் சென்ற அந்த இளம்பெண்ணை பிரதீப்குமாா் கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து அந்த இளம் பெண் குளத்துபுழா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த விஷயம் முதல்வர் பினராய் விஜயனின் கவனத்துக்கு சென்றதால் பிரதீப்குமாா் அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யபட்டதோடு போலீசாரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment

இந்த நிலையில், பிரதீப்குமாா் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யபட்டதில் மூன்று முறை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அந்த இளம் பெண் நீதிமன்றத்தில் பிரமாண வாக்கு மூலம் ஓன்றை தாக்கல் செய்தாா். அதில் நானும் பிரதீப்குமாரும் பரஸ்பரமாக ஒருத்தருக்கு ஒருத்தர் விருப்பத்தோடுதான் உறவு வைத்து கொண்டோம். இதில் என்னுடைய உறவினர்களின் சதி திட்டத்தால் அவர்களின் நிர்பந்தத்தால்தான் நான் அவா் மீது புகார் கொடுத்தேன் என்றார்.

இதனையடுத்து தொடர்ந்து 77 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு இன்று (24-ம் தேதி) நீதிமன்றம் பிரதீப்குமாருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் பிரதீப்குமாாின் பணி டிஸ்மிஸை அரசு பாிசீலனை செய்ய வேண்டும் என்றும்சாியான விசாரணை மேற்கொள்ளாமல் காவல்துறை நடவடிக்கை எடுத்ததால்போலீஸ் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe