Advertisment

திமுக அமைச்சர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Dismissal of case filed against DMK ministers

திமுக அமைச்சர்களுக்கு எதிராகத்தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த கே.என். நேரு, ரகுபதி, ஐ. பெரியசாமி, கோ.சி. மணி, குழந்தைவேலு ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

Advertisment

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு இரண்டாவது மேல் முறையீடு செய்தது. இந்நிலையில் அதிமுக அரசு செய்த முறையீட்டுவழக்கை இன்று தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

admk DVAC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe