Advertisment

டூல்கிட் விவகாரம்: 22 வயது சூழலியல் ஆர்வலர் கைது - அரசியல் தலைவர்கள் கண்டனம்!

disha ravi

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டுப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Advertisment

ஸ்வீடன்நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளிக்ரேட்டா தன்பெர்க், விவசாயிகள் போராட்டத்தைஎப்படி நடத்தலாம் என்ற வழிமுறைகள் அடங்கியஆவணம் (toolkit) ஒன்றைதனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஜனவரி26 ஆம் தேதி, விவசாயிகள் போராட்டத்தில் கலவரம்வெடித்தநிலையில்,க்ரேட்டா தன்பெர்க்பகிர்ந்தடூல்கிட்மீது, டெல்லி வன்முறைக்குக் காரணமாகஇருந்ததாகவழக்குப் பதிவுசெய்தனர்.

Advertisment

இந்நிலையில் 22வயதானஇந்தியச் சூழலியல் ஆர்வலர்திஷாரவி, க்ரெட்டா தன்பெர்க் பகிர்ந்தஆவணத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் எனவும்அவரே அந்த ஆவணத்தை க்ரெட்டாவுடன் பகிர்ந்துகொண்டார் எனவும்அவருக்குக் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி டெல்லிபோலீஸார் அவரைகைதுசெய்துள்ளனர்.

திஷா ரவி, க்ரெட்டாவின் சூழலியல் பிரச்சாரக் குழுவான ‘ஃபிரைடேஃபார்ஃபியூச்சர்’ (friday for future)அமைப்பின் இந்தியக் கிளையைஉருவாக்கியவர்களுள் ஒருவர். மேலும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டுவரைவு அறிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்ததோடு, இணைய வழி போராட்டத்திலும் ஈடுபட்டார். மேலும் பல சூழலியல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

திஷாரவியின்கைதுக்குடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழகஎதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Farmers farm bill greta thunberg
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe