மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று காலை நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் கூட்டம் நடத்தினர்.
இதில் வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகவும், வாக்கு எண்ணிக்கை நாள் வரை வாக்கு இயந்திரங்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிப்பது என முடிவு செய்தனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சி தலைவர்களும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வந்து, மனுவை ஆணையரிடம் அளித்துள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்கள் கலயாமல் ஆலோசனை செய்து வருகின்றனர். இக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்பு.