Advertisment

மத்திய அரசின் அடுத்த திட்டம் NPR... 24 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு...

NPR எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்து வரும் செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படலாம் என கூறப்படுகிறது.

Advertisment

discussion about npr in cabinet meeting

இந்தியாசுதந்திரம் அடைந்த பின்பு 1951 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தின்படி, இந்திய குடிமக்களின் பயோமெட்ரிக் தகவல்கள் பெறப்பட உள்ளன. அஸ்ஸாம் தவிர நாட்டின் மற்ற அனைத்து பகுதிகளிலும் என்.பி.ஆர் பணிகள் தொடங்கப்படும் என இந்திய பதிவாளர் ஜெனரலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான விவேக் ஜோஷி சமீபத்தில் தெரிவித்தார்.

Advertisment

அஸ்ஸாம் தவிர மற்ற மாநிலங்களில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் 2020 ஏப்ரல் 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை வீடு வீடாக கணக்கெடுப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் தகவல்களுடன் எடுக்கப்படும் இந்த கணக்கெடுப்பால் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தலாம் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க இது உதவும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை கூடவுள்ள அமைச்சரவை கோட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

census npr
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe