Advertisment

முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி இளைஞர்!

dh

Advertisment

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் நேற்று (24.09.2021) வெளியிடப்பட்டன. அதில், பொதுப்பிரிவில் 263 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 86 பேர், ஓ.பி.சி. பிரிவில் 229 பேர், எஸ்.சி. பிரிவில் 122 பேர், எஸ்.டி. பிரிவில் 61 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சிபெற்றிருந்தனர். இதில் 545 பேர் ஆண்கள், 216 பேர் பெண்கள் என்ற நிலையில், தேர்வில் வெற்றிபெற்ற சிலரது வாழ்க்கை பாதை மிகவும் கடினமாக இருந்திருந்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

குறிப்பாக இந்த தேர்வில் ரஞ்சித் என்ற மாணவர் 750வது இடத்தைப் பெற்று தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். பேச்சு மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு உடைய அவர், தன்னுடைய தாயின் உதவியுடன் படித்து தற்போது தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். படிக்கும் நேரங்களில் புத்தகத்தை தன்னுடைய தாயிடம் கொடுத்துப் படிக்கச்சொல்லி அதன் உச்சரிப்பைக் கொண்டு அவர் பாடத்தைப் படித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மாணவரின் கடின உழைப்பை சமூக ஊடகங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ias upsc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe