Skip to main content

முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி இளைஞர்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

dh

 

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் நேற்று (24.09.2021) வெளியிடப்பட்டன. அதில், பொதுப்பிரிவில் 263 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 86 பேர், ஓ.பி.சி. பிரிவில் 229 பேர், எஸ்.சி. பிரிவில் 122 பேர், எஸ்.டி. பிரிவில் 61 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் 545 பேர் ஆண்கள், 216 பேர் பெண்கள் என்ற நிலையில், தேர்வில் வெற்றிபெற்ற சிலரது வாழ்க்கை பாதை மிகவும் கடினமாக இருந்திருந்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

 

குறிப்பாக இந்த தேர்வில் ரஞ்சித் என்ற மாணவர் 750வது இடத்தைப் பெற்று தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். பேச்சு மற்றும் கேட்கும் திறனில் குறைபாடு உடைய அவர், தன்னுடைய தாயின் உதவியுடன் படித்து தற்போது தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். படிக்கும் நேரங்களில் புத்தகத்தை தன்னுடைய தாயிடம் கொடுத்துப் படிக்கச்சொல்லி அதன் உச்சரிப்பைக் கொண்டு அவர் பாடத்தைப் படித்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மாணவரின் கடின உழைப்பை சமூக ஊடகங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யு.பி.எஸ்.சி. போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
UPSC Attention Candidates

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2024) யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனையடுத்து போட்டித் தேர்வர்கள் கடந்த 6 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான முதல்நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் இந்திய வனப் பணி தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுப் பணியாளர் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி மே 26 அன்று நடக்க இருந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Attention UPSC Candidates; Important notification released by Central Government Staff Selection Commission

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட அரசின் உயர்நிலை உயரிய நிர்வாக பணியிடங்களுக்கு நடத்தப்படும் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், மார்ச் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். யு.பி.எஸ்.சி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பம் குறித்த விவரங்களுக்கு https://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.