அடுத்தடுத்த நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் கட்சி...

கர்நாடகாவில் எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

dinesh gundu rao resign his congress party's Karnataka State President post

இந்த 15 இடங்களில் 6 இடங்களை கைப்பற்றினால் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற சூழலில், அதற்கும் மேலான இடங்களை பாஜக கைப்பற்றியது. இதன் காரணமாக கர்நாடகாவில் பாஜக தனது அரசை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்தார். இந்த நிலையில், அடுத்த ஒருமணி நேரத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்களின் அடுத்தடுத்த பதவி விலகல்கள் மேலும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக கருத்து எழுந்து வருகிறது.

congress karnataka
இதையும் படியுங்கள்
Subscribe