Advertisment

பா.ஜ.க தலைவர்கள் செய்ததும் லவ் ஜிஹாத்தா..? திக்விஜய் சிங் சரமாரி கேள்வி...

digvijay about bjp love cooments

Advertisment

பா.ஜ.க தலைவர் முக்தர் அப்பாஸ்நக்வி, ஒரு இந்துபெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதால் அதுவும் லவ் ஜிஹாத்தா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் திக்விஜய் சிங்.

இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்வது திட்டமிட்டு நடத்தப்படுவது எனவும், இது 'லவ் ஜிஹாத்'எனவும் சில இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "ஒரு இஸ்லாமிய இளைஞர், ஒரு இந்து பெண்ணை மணந்தால் அது லவ் ஜிஹாத். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் உள்ள முக்தர் அப்பாஸ் நக்வி ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார், பா.ஜ.க தலைவர் ஹுசைனின் கூட்டாளியும் இந்து தான். அப்படியென்றால் இதுவும் ஒரு லவ் ஜிஹாத்தா?

இந்து-முஸ்லீம் வாதத்தை வளர்ப்பதைத் தவிர பா.ஜ.கவுக்கு எந்த வேலையும் இல்லை, விவாதிக்க எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்கள் வெறுப்பை பரப்பவும், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் பெயரில் மக்களைத் தூண்டவும் விரும்புகிறார்கள். இதை நாங்கள் எதிர்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe