Advertisment

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் குறையக் காரணம் கூடுதல் கட்டணம் பிடிக்கப்படுவதே - ஆய்வறிக்கை

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார், அதனை தொடர்ந்து பணப்புழக்கமும் குறைவானது. அதனால் மக்களும் பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி நகரத்தொடங்கினார்கள்.

Advertisment

digital payment

ஆனால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அதிக அளவில் முறைக்கேடுகளும் அதேநரத்தில் நடக்கத்தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இருந்து ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாறிவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனைகள் குறைந்து, ரொக்கப் பரிவர்த்தனை அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்று மும்பை ஐஐடி ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வில் பணமில்லா பரிவர்த்தனையைச் செய்யும் போது அங்கிகரிக்கப்படாத பலவேறு கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே ரொக்கப் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது எனத் தெரியவந்துள்ளது.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை போன்றவை மூலம் பணம் பரிவர்த்தனை செய்யக் கட்டணம் பிடிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தைத் தவிர்க்கவே பலரும் ரொக்கப் பணம் பரிவர்த்தனையைச் செய்கின்றனர்.

பணமில்லா பரிவர்த்தனை செய்யும் போது கட்டணங்கள் பிடிக்கப்படுவதை வணிகர்கள் முதல் வாடிக்கையாளர் வரை யாரும் விரும்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

Demonitization digital transaction
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe