இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்பான நிலையில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா, தோனி ஜோடியின் ஆட்டம் அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் இருந்தது.

Advertisment

Advertisment

ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்ட கூடிய சூழ்நிலையில் 49-வது ஓவரை பெர்குசன் வீச, முதல் பந்தை தோனி சிக்சருக்கு அடிக்க, யாரும் எதிர்பார்க்காத நிலையில் 3-வது பந்தில் குப்தில்லின் துல்லிய த்ரோவில் ரன் அவுட்டாகி தோனி அரைசத்துடன் வெளியேறினார். தோணி ரன் அவுட் ஆனதை சற்றும் எதிர் பார்க்காத ரசிகர்கள் கண் கலங்கினார்கள். தற்போது இணையத்தில் ரசிகர்கள் கண் கலங்கியது வைரலாகி வருகிறது.