தோனி, கோலி மகள்களை இழிவாகப் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு

Dhoni and Kohli's daughters were insulted; Police registered a case

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் கோலியின் மகள்கள் குறித்து அவதூறாகப் பேசிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் கோலியின் மகள்கள் குறித்து அநாகரீகமான கருத்துகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து புதுடில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறினார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர், “இது பற்றி நான் கூறிய பின் புதுடில்லி காவல்துறையினர்வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களைப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களது மகள்கள் குறித்து அநாகரீகமாகப் பேசுவது எவ்விதத்தில் நியாயம். இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனக் கூறினார்.

Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe