உலகையேஅச்சுறுத்தி வரும் கரோனாதொற்று, மும்பையின் தாராவிபகுதியைமட்டும் விட்டு வைக்கவில்லை.தமிழர்கள் அதிகம் வசித்துவரும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில், கரோனாபாதித்தவர்களை தனிமைப்படுத்துவது கடினமாக ஒன்றாக இருப்பதால் மே மாதத்தில்கரோனா பரவல் தீவிரமானது.
இதையடுத்து அங்குகொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. சுகாதாரபணியாளர்கள் வீடு வீடாக சென்றுகரோனாதடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு கரோனாபரவல்கட்டுக்குள்வந்தது. உலக சுகாதார அமைப்பும், மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியானதாராவியில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது புதிய நம்பிக்கையை தருவதாககூறி பாராட்டு தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் நேற்று தாராவிபகுதியில் நடைபெற்றகரோனாபரிசோதனையில், யாருக்கும் கரோனாதொற்று உறுதி செய்யப்படவில்லை. கடந்த ஏப்ரல்1 ஆம் தேதிக்குபின்பு, அப்பகுதியில் கரோனாஉறுதி செய்யப்படாத நாள் நேற்றுதான்.
இந்தியாவின் மிகவும் மக்கள் நெருக்கமான பகுதியில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளிப்பதாக அமைந்துள்ளது.