Skip to main content

சபரிமலையில் குவிந்த பக்தர்கள்!

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

 

 

Devotees gathered at Sabarimala!

 

விடுமுறை நாளான இன்று (05/12/2021) சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

 

கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய தினம அதிகபட்சமாக 34,900 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்றும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 40,700 பேர் தரிசனம் செய்வதற்காக இன்று முன்பதிவு செய்துள்ளனர். 

 

வரும் நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் அனைவரும் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருவண்ணாமலையில் குவிந்த ஜப்பான் பக்தர்கள்

Published on 07/01/2024 | Edited on 07/01/2024

 

திருவண்ணாமலை நகரில் கிரிவலப் பாதையில் பிரம்மாண்டமான பந்தலில் உலக நன்மைக்காக எனச் சொல்லி ஒரு பெரும் யாகம் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த யாகத்தில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜப்பானில் கோலிவுட் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் இருப்பது தமிழ்நாட்டு திரை ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் ஜப்பானில் சிவ பக்தர்கள் இருப்பதும் அவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற்ற யாகத்தில் வந்து கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மக்களிடத்தில்.

ஜப்பானில் குடும்பத்தோடு வாழும் தொழிலதிபர் தியாக குறிஞ்சி செல்வன், அவரது மனைவி மருத்துவர் விஜயலட்சுமி இருவரும் சிதம்பரம் தீட்சதரர்களை சென்னையைச் சேர்ந்த அகத்தியர் துரைசாமி சுப்புரத்தினம் மூலம் அழைத்து வந்து திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் இந்த மகா யாகத்தை நடத்தினர்.

உலக நன்மைக்காக தொடர்ந்து 15 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இந்த யாகத்தை பிரமாண்டமாக நடத்தி வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவண்ணாமலையில் நடத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டிலிருந்து குருநாதர் மசாகி அவயமா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட ஜப்பானிய சிவபக்தர்களான அண்ணாமலையார் பக்தர்கள் இதற்காகவே வந்து கலந்து கொண்டதை உள்ளூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மோகன், சூரி, ஜீவா, ஸ்ரீகாந்த், கணேஷ், ஆர்த்தி கணேஷ், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, ஸ்ரீ ரம்யா, ஜனனி ஐயர், விஜய் டிவி புகழ் அமுதவாணன் பாடகி தான்யஸ்ரீ, பாடகி அனிதா, பிரபல வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள்.

இரண்டு நாட்கள் யாகத்தில்  கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கி பிரமாண்டப்படுத்தியிருந்தனர். ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா வை சேர்ந்த சிவபக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்கவும், கிரிவலம் வர குவிந்து வரும் நிலையில் ஜப்பானை சேர்ந்தவர்கள் அண்ணாமலையார் பக்தர்களாக திருவண்ணாமலை வந்திருந்ததை அங்கு வந்த பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Next Story

சபரிமலை கூட்ட நெரிசல் விவகாரம்; கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
Sabarimala crowd issue; High Court orders action to Kerala Govt

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்தக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சூழலில், சபரிமலையில் இந்த ஆண்டுக்கான, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சபரிமலை நிர்வாகம் இது தொடர்பாக பக்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

வழக்கமாக டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம், இந்த ஆண்டு பூஜைக் காலத்தின் ஆரம்பத்திலேயே மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.  இருப்பினும் சபரிமலை மகர விளக்கு பூஜையை ஒட்டி பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சபரிமலை தரிசனத்திற்கு ஏற்கனவே ஆன்லைன் மூலம் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.  நேரடி முன்பதிவுக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்றும்,  இது வழக்கமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக 20 ஆயிரம் பக்தர்கள் அதிகமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும் வழித்தடத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் குறைகளை சரி செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் போலீஸ் டிஜிபி தலையிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.