மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக கடந்த இரண்டுவாரங்களாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னும் இழுபறியே நீடித்து வருகிறது. இந்நிலையில்நாளையுடன்தற்போதைய பாஜக ஆட்சியின்காலம்முடிவடைய இருக்கிறது, இந்த சூழ்நிலையில்மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன்முடிவடைய இருக்கும்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.