Advertisment

அடுத்த பத்து வருஷத்துக்கு பிரதமர் பதவியை புக் பண்ணிட்டோம் - பாஜக முதல்வர் மேடையில் பேச்சு...

hfggfhgf

Advertisment

மும்பையில் நேற்று விருதுவழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக முக்கிய தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்றார். அப்போது அவரிடம் நடிகர் ரித்திஷ் தேஷ்முக் சில அரசியல் கேள்விகளைக் கேட்டார். அதற்கு முதல்வர் பட்னாவிஸ் பதில் அளித்தார். அப்போது ரித்திஷ் தேஷ்முக் கேட்ட ஒரு கேள்விக்கு பட்னாவிஸ் அளித்த பதில் பாஜக தொண்டர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து சரத் பவார், நிதின் கட்காரி ஆகிய இருவரில் யார் பிரதமராக வருவார் என ரித்திஷ் தேஷ்முக் கேட்க, அதற்கு பதிலளித்த பட்னாவிஸ், 'அடுத்த இரு தேர்தலுக்கு நங்கள் ஏற்கனவே பிரதமர் பதவியை புக் செய்து விட்டோம். 2024 தேர்தலுக்கு பின் இவர்கள் இருவரில் யார் வந்தாலும் சந்தோசம் தான்' என கூறினார். இதன் மூலம் அடுத்த இரு தேர்தல்களுக்கும் மோடியே பாஜக வின் பிரதமர் வேட்பாளர் என அவர் உறுதி செய்திருக்கிறார். இதனை பாஜக தொண்டர்கள் சமூகவலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Devendra Fadnavis modi
இதையும் படியுங்கள்
Subscribe