தேவேந்திர குல வேளாளர் மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியது!

rajya sabha

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தேவேந்திர குலத்தார், கடையர், குடும்பர், பள்ளர், காலாடி, பன்னாடி, வாதிரியார்உள்ளிட்ட ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து 'தேவேந்திர குல வேளாளர்' என்றழைக்க வழிவகை செய்யும் மசோதாவை, கடந்த ஃபிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்.

அதனைதொடர்ந்துகடந்த 19 ஆம் தேதி, இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்தநிலையில் இன்று இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளஇம்மசோதா, அவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகி அமலுக்கு வரும்.

Rajya Sabha Tamil Nadu
இதையும் படியுங்கள்
Subscribe