devendra fadnavis tests positive for corona

மஹாராஷ்ட்ர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், மஹாராஷ்ட்ர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து, தனது ட்விட்டர் பதிவில், "ஊரடங்கு தொடங்கியதில் இருந்து நான் தினமும் பணியாற்றி வருகிறேன், ஆனால் இப்போது நான் சிறிது நேரம் நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று தெரிகிறது! நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி அனைத்து மருந்துகளையும் சிகிச்சையையும் எடுத்துக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா சோதனை செய்துகொள்ளுங்கள்" எனத் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.