Devendra Fadnavis said We ourselves did not expect this

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 145 ஆகும். இந்நிலையில் பாஜக கூட்டணி 231 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 51 இடங்களிலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக பாஜக 127 இடங்களிலும், சிண்டே தலைமையிலான சிவ்சேனா 56 தொகுதிகளிலும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) 11 தொகுதிகளிலும், சிவசேனா (யூ.பி.டி) 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். இதன் மூலம் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆளும் மஹாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், “நாங்களே இதை எதிர்பார்க்கவில்லை; எல்லாமே எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.