ADVERTISEMENT

அனைத்து பள்ளிகளிலும் இனி மராத்தி மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும், மறுத்தால் கடும் நடவடிக்கை- மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு...

12:05 PM Jun 21, 2019 | kirubahar@nakk…

மகாராஷ்டிராவில் வாழ்பவர்கள், கல்விகற்பவர்கள் மராத்தி மொழியைப் பின்பற்றுவது அவசியம். எனவே சிபிஎஸ்இ மற்றும் பன்னாட்டுப் பாடத் திட்டப் பள்ளிகள் என அனைத்துமே கட்டாயம் மாணவர்களுக்கு மராத்தி மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவசேனா உறுப்பினர் நீலம் கோர்ஹே பன்னாட்டு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் மராத்தி மொழியைப் புறக்கணிப்பதாகவும், மராத்திய கற்பிப்பதில் சுணக்கம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டியதை அடுத்து பட்னாவிஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார். இது தொடர்பாக முன்னணி மராத்தி மொழி அறிஞர்கள், முதல்வர் பட்னாவிஸைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவிருக்கின்றனர். மராத்தியை கட்டாயமாக்குவது தொடர்பான விதிமுறைகள் மாநிலம் முழுவதும் வலுவாக அமலாக்கம் செய்யப்படும் என பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT