Advertisment

கையை விட்டு போன முதல்வர் பதவி... வீடு தேடும் பட்னாவிஸ்!

மாகாராஷ்டிர முதல்வராக இரண்டாவது முறையாக நான்கு நாட்களுக்கு பதவி வகுத்த பட்னாவிஸ் மும்பையில் வாடகைக்கு வீடு தேடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாக்பூரை சேர்ந்த மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற பின்னர் மும்பையில் உள்ள மலபார் ஹில்லில் முதல்வர்கள் வசிக்கும் பங்களாவான வர்சாவில் வசித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் மகாராஷ்டிர அரசியலில் நடந்த அதிரடி திருப்பங்களால் முதல்வர் பங்களாவை காலி செய்கிறார். இதனால் மும்பையில் வேறு பொரு வாடகை வீடு தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடு தேடும் அவர் மீது தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Devendra Fadnavis
இதையும் படியுங்கள்
Subscribe