Advertisment

"வளர்ச்சியே நமது மதம்!" - பிரதமர் மோடி!

pm modi

பிரதமர் நரேந்திரமோடி, கேரளாவில் இன்று பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை, காணொலி மூலமாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர், இந்தியா நீலப் பொருளாதாரத்தில் முதலீடு செய்து வருவதாகவும், விவசாயிகளை சூரிய சக்திதுறையுடன்இணைப்பதற்கான பணிகள்நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

வளர்ச்சித் திட்டப் பணிகள்தொடக்கவிழாவில்பிரதமர் மோடி ஆற்றியஉரை வருமாறு;

சூரிய சக்திக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சூரியசக்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்கள், காலநிலை மாற்றத்திற்கு எதிரான வலுவான போராட்டத்தையும், நமது தொழில் முனைவோருக்கு ஊக்கத்தையும் உறுதி செய்கின்றன. கடினமான உழைப்பாளிகளான நமது விவசாயிகளை, சூரியசக்தித் துறையுடன் இணைத்து அன்னமிடுபவர்களை, ஆற்றல் அளிப்பவர்களாகவும் உருவாக்குவதற்கும் பணிநடந்து வருகின்றன.

Advertisment

இந்தியா நீலப் பொருளாதாரத்தில் (நீர் சார்பொருளாதாரம்) முதலீடு செய்து வருகிறது. நமது மீனவர்களின் முயற்சிகளை நாம் மதிக்கிறோம். மீனவர் சமூகத்திற்கான எங்கள் முயற்சிகள் அதிக கடன், அதிகரித்த தொழில்நுட்பம், உயர்தர உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவான அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. மீனவர்களுக்கும் உழவர்கடன் அட்டை கிடைக்கிறது.

வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் சாதி, மதம், இனம், பாலினம்,மொழி ஆகியவைதெரியாது. வளர்ச்சி என்பது அனைவருக்குமானது. வளர்ச்சி நமதுநோக்கம்,வளர்ச்சியேநமதுமதம். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

economy Kerala Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe