தங்களது கொள்கைகளில் ஒரு சார்புடன் ஃபேஸ்புக் நிறுவனம் நடந்து கொள்வதாக புகார் எழுந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், "எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம். ஃபேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். எந்த வகையிலும் ஃபேஸ்புக்கில் வெறுப்பு மேலோங்குவதை ஏற்க மாட்டோம்" என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.