Advertisment

ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்... அமலாக்கத்துறை நடவடிக்கை!

 Detention at Jacqueline Fernandez Airport ...  Enforcement action!

200 கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பாக, பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

Advertisment

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரோடு தொடர்புடையதாக, ஏற்கனவே ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மஸ்கட் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் சென்றிருந்தார். அங்கு அவரை அமலாக்கத்துறையினர்அதிரடியாக தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, டெல்லிக்கு அழைத்துச் சென்று அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் இடையே பணப்பரிவர்த்தனை நடந்தது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

enforcement directorate airport Jacqueline Fernandez
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe